Sunday, December 09, 2007

Star26. அனைவருக்கும் 'நட்சத்திர' நன்றி + ஒரு வாக்கெடுப்பு

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

எனது நட்சத்திர வாரம் நிறைவடையும் தருணம் வந்து விட்டது ! என் இந்த வார இடுகைகளை வாசித்து பின்னூட்டம் இட்ட /இடாத அனைவருக்கும் நன்றி. வாசிக்காதவர்களும் பெரிதாக ஒன்றும் இழந்து விடவில்லை :)

என்னை நட்சத்திர வாரப் பதிவராக இருக்குமாறு அழைத்தபோது, நான் ஒரு 'பழைய' பதிவராக ஆகி விட்ட நிலையில், அழைப்பை ஒப்புக் கொள்ள ஒரு தயக்கம் இருந்ததென்னவோ நிஜம், புதிதாக தமிழில் வலை பதிய வந்தவர்களுக்கு அந்த வாய்ப்பு தரப்படுவது தான் சரியாக இருக்கும் என்று ஓர் எண்ணம் இருந்ததால்! ஆனால், தமிழ்மணம் நட்சத்திர நிர்வாகி என்னை ஒப்புக் கொள்ள வைத்து விட்டார். என் பணி நிலைமையை கருத்தில் கொண்டு, என் நட்சத்திர வாரத்தை சற்று தள்ளி வைக்கவும் ஒப்பிய அவருக்கு என் நன்றி!

எனது வலைப்பதிவு கவுண்டரின் இவ்வார ஓட்டம் திருப்திகரமாகவே இருந்தது :)
ப்ளாக் கவுண்டர் எண்ணிக்கை அதிகரிப்பு: 4970
அதாவது, இவ்வாரம் என் வலைப்பதிவு, ஒவ்வொரு மணி நேரத்திற்கும், கிட்டத்தட்ட 30 தடவை திறக்கப்பட்டுள்ளது! வாசகர்கள் மற்றும் தமிழ்மணம் தயவால் !

நட்சதிர வாரப் பதிவுகளுக்கு வந்த பின்னூட்டங்கள்: 254
வாசகர்களுக்கு நன்றி. என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி.
இந்த நட்சத்திர வாரத்தில், சில குறிப்பிட்ட பதிவுகளுக்கு, 'கருத்து கூறுவார்கள்' என்று நான் எதிர்பார்த்த சில பதிவர்கள் வராமல் என்னை ஏமாற்றி (!) விட்டாலும், பல புதிய வாசகர்களை, இந்த நட்சத்திர வாரம் எனக்கு பெற்றுத் தந்துள்ளது!

பலதரப்பு வாசகருக்கும் ஏற்றாற் போல், (அரசியல், சமூகம், ஆன்மிகம், கிரிக்கெட், பல்லவியும் சரணமும், சிறுகதை, சினிமா, தொழில்நுட்பம், அறிவியல், நகைச்சுவை, வலைச்சூழல் என்று) பல சப்ஜெக்ட்களில் என் நட்சத்திர வாரப் பதிவுகள் இருக்குமாறு பார்த்துக் கொண்டேன் என்று நம்புகிறேன்! (நீங்கள் தான் சொல்ல வேண்டும்!)

அது போலவே கி.அ.அ.அனானி பதிவுகளை தவிர்த்து விட்டேன் ;-)

கொஞ்சம் சுய தம்பட்டம்!

தமிழ்மண நட்சத்திர வரலாற்றில் முதன்முறையாக (சன் டிவியில் வரும் "இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக" போல் வாசிக்கவும்:)) எனது நட்சத்திர வாரத்தில் 26 புத்தம் புதிய பதிவுகளை (இப்பதிவையும் சேர்த்து, மீள்பதிவுகளையும் சேர்த்தால் 33!) இட்டு ஓர் அரிய பெரிய சாதனையை ஏற்படுத்தியுள்ளேன் :)

உங்கள் ஊக்கமும் இதற்கு ஒரு காரணம் !


Please Vote!
பாலாவின் நட்சத்திர வாரம் எப்படியிருந்தது ?

தேறவில்லை
பரவாயில்லை
நன்று
சிறப்பு


இந்த நட்சத்திர வாரத்திற்காக அதிகம் உழைத்து விட்டதால், ஒரு 'பிரேக்' முடிந்து பின்னர் சந்திப்போம்! விடை பெறுகிறேன்.

வாக்குப் பெட்டியில் உங்கள் வாக்கை பதிவு செய்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொள்கிறேன்!

எனது மற்ற நட்சத்திர வாரப்பதிவுகளை இங்கு சென்று வாசிக்கவும்

என்றென்றும் அன்புடன்
பாலா

17 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

Good bye :)

துளசி கோபால் said...

தேறவில்லைன்னு சொல்ல முடியாம,
நன்றாக, சிறப்பாக,பரவாயில்லைன்னு இருந்தது.

வாழ்த்து(க்)கள் பாலா.

வடுவூர் குமார் said...

வாக்களித்துவிட்டேன்.

பாச மலர் / Paasa Malar said...

நட்சத்திர வாரம் பலவித பரிமாணங்களில் நன்றாக இருந்தது. வாழ்த்துகள்.

-L-L-D-a-s-u said...

voted

enRenRum-anbudan.BALA said...

துளசி, வடுவூர் குமார், பாசமலர்
பாராட்டுக்கு நன்றி, வாக்களித்ததற்கும் :)

L L தாஸு,
எங்க, நம்ம நட்சத்திர வாரம்போது ஆளையே காணோம் ???? பதிவுகளைப் பார்த்தீர்களா ?

said...

வாக்களித்துவிட்டேன். ..

வவ்வால் said...

எ.அ.பாலா,

நீங்களே சொல்லி இருக்கிங்க அதிக பதிவு போட்டாச்சுனு, முழுவதும் படிக்கவில்லை, ஆனால் படித்தவரைக்கும், நன்றாக இருந்தது! எனவே நான் படிக்காத பதிவுகளும் நன்றாகவே இருந்து இருக்கும்:-))

கல்யாணம் ஆன புதுசுல அதுவும் தாமதமா ஆனா கட்டிலை உடைப்பாங்களாம்,(அப்படி ஒரு அரிய காட்சியை ஒரு தமிழ் படத்தில் பார்த்தேன்) நீங்க நட்சத்திரவாரப்பதிவுகளின் எண்ணைக்கை ரெக்கார்டை உடைச்சுட்டிங்களே :-))

இலவசக்கொத்தனார் said...

எண்ணிக்கை ரொம்ப அதிகமா போனதுனால ஒரு ஓவர்டோஸ் ஆன உணர்வு.

நம்ம நண்பரான கி.ட்ரிபிள்அ-வைத் தவிர்த்து என்னை ஏமாற்றி விட்டீர்கள்.

enRenRum-anbudan.BALA said...

வவ்வால்,
//முழுவதும் படிக்கவில்லை, ஆனால் படித்தவரைக்கும், நன்றாக இருந்தது!
//
மிக்க நன்றி. அப்படியே ஒட்டும் போட்டுடுங்க :)

//எனவே நான் படிக்காத பதிவுகளும் நன்றாகவே இருந்து இருக்கும்:-))
//
உங்களைப் போன்றவர்கள் எனது நட்சத்திர வாரப் பதிவுகள் அனைத்தையும் (சமயம் இருக்கும்போது) வாசிக்க வேண்டும் என்பது என் விருப்பம், பின்னூட்டம் இட வேண்டும் என்ற அவசியமெல்லாம் இல்லை ;-)

நோபல் பதிவில், உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் தந்திருக்கிறேன், பார்த்தீர்களா ?
Also, Boston Bala has responded to your comments at
http://balaji_ammu.blogspot.com/2007/12/star17.html ;-)

எ.அ.பாலா

said...

///
இலவசக்கொத்தனார் said...
நம்ம நண்பரான கி.ட்ரிபிள்அ-வைத் தவிர்த்து என்னை ஏமாற்றி விட்டீர்கள்///

இந்த பாச மிகு தம்பியை இந்தத் தருணத்தில் நினைவு கூர்ந்த அண்ணன் இ கொ வாழ்க

பாலாஜி அவர்கள் இந்த புறக்கணிப்பிற்கு மக்கள் மன்றத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

ஆனால் அடுத்த வாரம் பூராவும் பாலாஜி அவர்கள் எனக்காக ஒதுக்கி கி அ அ அனானி வாரம் கொண்டாடப் போகிறாராம்...கை வசம் 4 பதிவுகள் ரெடி :) போட்டு ராவடி பண்ணிப் போடுவம்ல :)

கி அ அ அனானி

enRenRum-anbudan.BALA said...

கொத்ஸ்,

அதான் கி டிரிபிள் அ அவர்களே உங்கள் ஆதங்கத்தை புரிந்து கொண்டு, ஆட்டைக்கு சீக்கிரமே வரேன்னு சொல்லியிருக்கிறாரே, ஓகே தானே ;-))))))

said...

வாழ்த்துக்கள் பாலா,

ஒரு வித்தியாசமான, அடர்த்தியான நட்சத்திர வாரத்திற்கு.

பின்னூட்டம் போடவில்லையே தவிர எல்லாவற்றையும் படித்துவிட்டேன். இப்போதும் டாப்பில் இருப்பது "மன்னனின் கௌரவம்" தான். அரசியல் சினிமா விளையாட்டு காமெடி என்று எதையும் விடாமல் வெளுத்து வாங்கிவிட்டீர்கள்.

செல்லி said...

வாக்களித்துவிட்டேன்
வாழ்த்துக்கள், பாலா

enRenRum-anbudan.BALA said...

செல்லி, பெனாத்தல் சுரேஷ்,

nanRi !

மதுமிதா said...

தாமதமான நட்சத்திர வாழ்த்துகள் பாலா.

26 பதிவா?

அய்யோ கடவுளே அப்போ இன்னும் 24 பதிவு எழுதணுமா:-)

enRenRum-anbudan.BALA said...

மதுமிதா,
//26 பதிவா?

அய்யோ கடவுளே அப்போ இன்னும் 24 பதிவு எழுதணுமா:-)
//
ஒரு ரெக்கார்ட் செட் பண்றதே அதை யாராவது முறியடிக்கணும்னு தானே :))) நன்றி !

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails